பிரமாண்ட கோடீஸ்வர தீவு...காதலிக்காக ரூ.659 கோடியில் மாளிகை - அசத்திய அமேசான் நிறுவனர்!

Amazon
By Thahir Oct 16, 2023 08:29 PM GMT
Report

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், தனது காதலிக்கான மற்றுமொரு பரிசாக, அமெரிக்காவின் கோடீஸ்வரத் தீவு ஒன்றில் ரூ.659 கோடியில் மாளிகை ஒன்றினை வாங்கியுள்ளார்.

ரூ659 கோடியில் வசந்த மாளிகை 

அமேசான் நிறுவனரும், உலகின் மூன்றாவது பணக்காரருமான, ஜெஃப் பெசோஸ் தனது 59 வயதில் காதலில் விழுந்துள்ளார். நீண்டகால காதலியும் வருங்கால மனைவியுமான -லாரன் சான்செஸ்க்காக, கடந்த வாரம் இவர் வாங்கிய ரூ659 கோடி மதிப்பிலான வசந்த மாளிகை, அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரமாண்ட கோடீஸ்வர தீவு...காதலிக்காக ரூ.659 கோடியில் மாளிகை - அசத்திய அமேசான் நிறுவனர்! | Amazon Founder Jeff Bezos Buys Rs659 Crore House

புளோரிடா அருகே கோடீஸ்வரர்களுக்கு மட்டுமேயான தீவு ஒன்றில் இந்த வசந்த மாளிகையை ஜெஃப் நிர்மாணித்திருக்கிறார். இந்தியன் க்ரீக் தீவு என்று அழைக்கப்படும் மனிதரால் உருவாக்கப்பட்ட தடுப்புத் தீவில், ஜெஃபின் புதிய சொத்து 1.84 ஏக்கரை ஆக்கிரமித்துள்ளது.

பிரமாண்ட கோடீஸ்வர தீவு...காதலிக்காக ரூ.659 கோடியில் மாளிகை - அசத்திய அமேசான் நிறுவனர்! | Amazon Founder Jeff Bezos Buys Rs659 Crore House

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியன் க்ரீக் தீவின் மக்கள் தொகை வெறும் 81 மட்டுமே. அமெரிக்க டாலர் மதிப்பில் 79 மில்லியன் டாலர் மதிப்பிலான ஜெஃபின் புதிய சொத்து, எற்கனவே அவர் அங்கு வாங்கியுள்ள 68 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மாளிகைக்கு அருகிலேயே அமைந்துள்ளது.

அதி நவீன சொகுசு வசதிகள் 

ஜெஃப் பெசோஸ் வாங்கியிருக்கும் புதிய மாளிகையில் அதி நவீன நீச்சல் குளம், திரையரங்கு, நூலகம், மது கொண்டாட்டத்துக்கான பாதாள அறை, பணிப்பெண்கள் தங்கும் அறைகள், ஆறு வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவை அமைந்திருக்கின்றன.

கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் தற்போது தனது அமேசான் ஆன்லைன் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அள்ளிவிட்டிருக்கும் ஜெஃப் பெசோஸ்க்கு, புளோரிடா மாளிகையையும் சற்றே தள்ளுபடியில் கிடைத்திருக்கிறது.

சொத்தின் ஆரம்ப பட்டியல் விலையான $85 மில்லியனில் இருந்து 7.1% தள்ளுபடியில் தற்போது அதனை ஜெஃப் பெசோஸ் பெற்றுள்ளார்.

முன்னதாக காதலி லாரன் சான்செஸ்க்கு 2.5 மில்லியன் டாலர் மதிப்பிலான வைரத்தை பரிசளித்த ஒரே மாத இடைவெளியில், அடுத்த அதிரடியாக புதிய வசந்த மாளிகையை பெசோஸ் பரிசளித்திருக்கிறார்.