இந்த நாடுகள் எல்லாம் அழிந்து விடும் - எலான் மஸ்க் கணிப்பு
உலகின் சில நாடுகள் அழிந்து விடும் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.
எலான் மஸ்க்
பிரபல தொழிலதிபரும், உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவருமான எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர்.
அவ்வப்போது இவர் வெளியிடும் பதிவுகள் சமூகவலைத்தளத்தில் பேசுபொருள் ஆகும். இந்நிலையில் தற்போது அவர் சிங்கப்பூர் அழியும் என கூறியுள்ளது வைரலாகி வருகிறது.
சிங்கப்பூர்
மரியோ நாவ்ஃபால் என்பவர், சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பது தொடர்பான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், "2023 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதமானது 0.97 ஆகக் குறைந்துள்ளது. இதனால் சிங்கப்பூரில் வயதானவர்கள் எண்னிக்கை அதிகரித்து, தொழிலாளர் எண்னிக்கை குறையும்.
Singapore (and many other countries) are going extinct https://t.co/YORyakBynm
— Elon Musk (@elonmusk) December 5, 2024
இதன் காரணமாக, தொழிற்சாலை முதல் உணவு விநியோகம் வரை அனைத்தும் பாதிக்கும். 2014 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் 6 பேரில் ஒருவர் 65 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தார். 2030 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 4 பேரில் ஒருவர் என அதிகரிக்கும். தொழிலார்களின் தேவையை பூர்த்தி செய்ய ரோபோக்களை பயன்படுத்த வேண்டி வரும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
குழந்தை பிறப்பு விகிதம்
இந்த பதிவை பகிர்ந்த எலான் மஸ்க், சிங்கப்பூர் மற்றும் சில நாடுகள் அழிய உள்ளது என தெரிவித்துள்ளார். குழந்தை பிறப்பு விகித குறையும் பிரச்சனையை சிங்கப்பூர் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளும் எதிர்கொண்டுள்ளது.
சீனா போன்ற நாடுகள் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. சமீபத்தில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்க வேண்டும் என பேசி இருந்தனர்.