டைம் டிராவல் செய்தாரா எலான் மஸ்க்? அவரே காட்டிய ஆதாரம்

Elon Musk X Social Media
By Karthikraja Nov 25, 2024 03:56 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

நான் ஒரு டைம் டிராவல் செய்துள்ளேன் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்

உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் Tesla, SpaceX , Starlink, X(டிவிட்டர்) போன்ற பல்வேறு நிறுவனங்களை நிறுவனங்களை நடத்தி வருகிறார். 

elon musk time travel

இவர் தனது எக்ஸ் பக்கத்தில் அடிக்கடி பயணர்களுடன் உரையாற்றுவார். அவ்வாறு அவர் பேசும் பல விஷயங்கள் வைரல் ஆகும். 

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு 40 நிமிடத்தில் செல்லலாம் - எலான் மஸ்கின் ஸ்டார்ஷிப் திட்டம்

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு 40 நிமிடத்தில் செல்லலாம் - எலான் மஸ்கின் ஸ்டார்ஷிப் திட்டம்

டைம் டிராவல்

இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாலை 2:30 மணியளவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு மீம் ஒன்றை பகிர்ந்து, ” இன்று அதிகாலை 2:30 மணியளவில் எனது பக்கத்து வீட்டுக்காரர் என் கதவைத் தட்டிக் கொண்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக, நான் முழித்துக்கொண்டு பேக்பைப்ஸ் விளையாடிக் கொண்டிருந்தேன். நீங்கள் அதை நம்புவீர்களா?” என பதிவிட்டு இருந்தார். 

அதற்கு எக்ஸ் தள பயனர் ஒருவர், நீங்கள் ஒரு வேம்பைர் என்பதால் தூங்கவில்லையா? என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த எலான் மஸ்க் “நான் டைம் டிராவல் செய்யும் வேம்பைர் ” என கூறினார். 

இதனையடுத்து, எலான் மஸ்க் எக்ஸ் அதிகாரப்பூர்வ கணக்குகான verified tick 3000 BCE -இல் வாங்கியது போல காட்டியது. அதை ஸ்கிரீன் சாட் எடுத்து பகிர்ந்த பயனர் ஒருவர், "நேற்று தான் ஒரு டைம் டிராவல் செய்யும் வேம்பைர். அவரது எக்ஸ் கணக்குக்கும் 3000 வருடங்களுக்கு முன் verified tick வழங்கப்பட்டுள்ளது" எனபதிவிட்டிருந்தார்.

5000 வயது

அந்த பதிவை பகிர்ந்த எலான் மஸ்க், “பாருங்கள், நான் ஒரு டைம் டிராவல் செய்யும் வேம்பைர் வேற்றுகிரகவாசி என்பதை இது நிரூபிக்கிறது! நான் 5000 வயதாக இருந்தாலும், நான் மிகவும் இளமையாக இருப்பதாக நினைக்கிறேன்" என கூறியுள்ளார். 

எக்ஸ் தளத்தின் உரிமையாளர் என்பதால் , verified tick வழங்கிய காலத்தை விளையாட்டாக எலான் மஸ்க் தனது பக்கத்தில் மாற்றியுள்ளார்.

2007 ஆம் ஆண்டு முதல் டிவிட்டர்(Twitter) என்ற பெயரில் இயங்கி வந்த சமூக வலைத்தளத்தை, 2023 ஆம் ஆண்டு 44 பில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் 3.30 லட்சம் கோடி) கொடுத்து வாங்கி எக்ஸ்(X) என பெயர் மாற்றினார் எலான் மஸ்க்.