மக்கள் தொகை வீழ்ச்சி குறித்து எலான் மஸ்க் எச்சரிக்கை - வைரலாகும் டுவிட்

Twitter Elon Musk
By Nandhini Aug 26, 2022 07:20 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

மக்கள் தொகை வீழ்ச்சி குறித்து எலான் மஸ்க் தன் டுவிட்டரில் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

எலான் மஸ்க்

டுவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டெஸ்லா தலைமை நிர்வாகி எலான் மஸ்க், தனது முன்னுரிமைகளில் ஒன்று “ஸ்பேம் போட்களை” அகற்றுவது என்று டுவீட் செய்த சில நாட்களுக்குப் பிறகு, டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறினார்.

உக்ரைனுக்கு உதவி

இதனையடுத்து, எலான் மஸ்க்கும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு தனது ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவைகளை வழங்கி வந்தார்.

கால்பந்து அணியை வாங்க முடிவு

சமீபத்தில் இங்கிலாந்தின் புகழ் பெற்ற கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

elon-musk-twitter

எலான் மஸ்க் எச்சரிக்கை

இந்நிலையில், மக்கள் தொகை வீழ்ச்சி குறித்து எலான் மஸ்க் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘பிறப்பு விகிதம் குறைவால் ஏற்படும் மக்கள் தொகை வீழ்ச்சியே, உலகம் வெப்பமயமாதலை விட மிகவும் அபாயமானது’ என்று பதிவிட்டுள்ளார்.