இங்கிலாந்தின் புகழ் பெற்ற கால்பந்து அணியை வாங்க எலான் மஸ்க் முடிவு

Elon Musk
By Nandhini 1 மாதம் முன்

எலான் மஸ்க்

டுவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டெஸ்லா தலைமை நிர்வாகி எலான் மஸ்க், தனது முன்னுரிமைகளில் ஒன்று “ஸ்பேம் போட்களை” அகற்றுவது என்று டுவீட் செய்த சில நாட்களுக்குப் பிறகு, டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறினார்.

உக்ரைனுக்கு உதவி

இதனையடுத்து, எலான் மஸ்க்கும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு தனது ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவைகளை வழங்கி வந்தார்.

Elon Musk

கால்பந்து அணியை வாங்க எலான் மஸ்க் முடிவு

இந்நிலையில், இங்கிலாந்தின் புகழ் பெற்ற கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ விளையாடி வரும் இங்கிலாந்தின் கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட்டை வாங்க இருப்பதாக எலான் மஸ்க் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.