நைஸ் ட்ரை நாசா... பிரபஞ்ச புகைப்படத்தை நக்கலடித்த எலான் மஸ்க்!

Twitter Elon Musk NASA SpaceX
By Sumathi Jul 15, 2022 08:00 AM GMT
Report

நாசா தயாரித்துள்ள 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. தற்போது இந்த புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் திகைத்துள்ளனர்.

பிரபஞ்ச புகைப்படங்கள்

பிரபஞ்சம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் மனித குலத்தை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நாம் வாழும் பூமி எப்படி தோன்றியது.

elon musk

அண்ட பால்வெளி வீதியில் என்ன உள்ளது என்பது பற்றி கண்டறிய விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சில ட்விட்டர் பயனர்கள் பிரபஞ்சத்தின் இந்த ஆழமற்ற பார்வையின் வெளிச்சத்தில் தங்கள் கவலைகள் கலைந்து போவதாக உணர்ந்ததாகக் கூறினார்கள்.

 எலான் மஸ்க் 

மேலும், தங்களுக்கு உள்ளேயே ஆழ்ந்த கேள்வி எழுப்பும் தருணமாக இருப்பதாக கேலியாக குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில்

நாசா நிறுவனத்தை கலாய்த்தப்படி வெளியிட்ட புகைப்படம் ஒன்று நெட்டிசன்களால் பேசப்பட்டு வருகிறது. அவர் வெளியிட்ட புகைப்படத்தில், Nice try nasa என கேப்ஷனில்,

 Nice try nasa

வீட்டு சமையலறையில் உள்ள டைல்ஸின் புகைப்படத்தை குறிப்பிட்டு அதேப்போல் உள்ளது என கிண்டலடிக்கும் விதமாக வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது நெட்டிசன்களால் பகிரப்பட்டு பலரும் பலவிதமான கருத்துகளை பதிவிட்டும் வருகின்றனர்.