நாசா செலுத்திய உலகின் மிகப்பெரிய ‘ஜேம்ஸ் வெப்’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

success nasa James Web Flew into the sky
By Nandhini Dec 26, 2021 04:29 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

அதிக பொருட்செலவில் 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கியை விண்ணில் செலுத்திய நாசா வெற்றியடைந்துள்ளது .

இதுவரை அல்லாத அளவிற்கு பால்வளி அண்டத்தில் சூரிய குடும்பம் அல்லாத பிற கோள்களை துல்லியமாக கண்டறிய 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பை விண்ணில் செலுத்தி உள்ளது நாசா.

இந்த தொலைநோக்கியின் எடை கிட்டத்தட்ட 6000 கிலோ என தகவல் வெளியாகியுள்ளது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களின் வளிமண்டலங்களை தெளிவாக ஆய்வுசெய்ய திட்டமிட்டு நாசா 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கியை விண்ணில் செலுத்தி உள்ளது.

இந்த தொலைநோக்கியின் ஆயுட்காலம் குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தொலைநோக்கியை நிலையான சுற்றுவட்ட பாதையில் கொண்டு சேர்க்க 30 நாட்களாகும் எனவும், அதன் பின்பு தான் விண்வெளியில் எடுக்கப்படும் புகைப்படங்களை நாசாவிற்கு அனுப்பும் பணியை இந்த தொலைநோக்கி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.