தவறான வங்கி கணக்குக்கு கோடிகளை அனுப்பிய எலான் மஸ்க் - X தளத்துக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
எலான் மாஸ்க் தவறான வங்கி கணக்கிற்கு பல கோடிகளை அனுப்பி உள்ளார்.
எலான் மஸ்க்
பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். X சமூக வலைதளத்தின் உரிமையாளரும் அவரே.
பிரேசில் தேர்தலின்போது எக்ஸ் தளத்தில் முடக்கப்பட்டிருந்த பல்வேறு கணக்குகள் அனுமதியின்றி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாகவும், இதனால் கட்டுப்பாடுகள் இன்றி எக்ஸ் தளம் செயல்பட்டு வருவதாகவும் என பிரேசில் உச்சநீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.
பிரேசில்
மேலும் எக்ஸ் தளத்திற்கான பிரதிநிதியை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இதை ஏற்க மறுத்த எலான் மஸ்க் பிரேசிலில் உள்ள அலுவலகத்தை மூடி விட்டு, எக்ஸ் தள சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவித்தார்.
ஆனால் எக்ஸ் தளத்துக்குத் தடைவிதித்த நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ், தடையை நீக்க வேண்டுமானால், 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.43 கோடி) அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தவறான கணக்கு
பிரேசில் நாட்டில் இருக்கும் 2.2 கோடி எக்ஸ் பயனர்களை இழக்க விரும்பாத எலான் மஸ்க், வேறு வழியின்றி அபராதம் செலுத்த சம்மதித்தார். அபராதத் தொகையை செலுத்திய எக்ஸ் நிறுவனம், கோர்ட் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பாமல், தவறுதலாக வேறு வங்கிக் கணக்குக்கு அனுப்பிவிட்டது.
இதனால் எக்ஸ் தளம் மீதான தடை நீக்கப்படவில்லை. சரியான கணக்குக்கு பணத்தை அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.