இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வரும் எலான் மஸ்க்: காரணம் என்ன?
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருவேன்" என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்
எலான் மஸ்க் பிரதமர் மோடியுடன் வெள்ளிக்கிழமை தொலைபேசி வழியாக உரையாடிய நிலையில் தனது இந்தியாவின் வருகை பற்றி பேசியுள்ளார்.
தன்னுடன் பேசியது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவினை இணைத்து பதிவிட்டுள்ள எலான் மஸ்க், “பிரதமர் மோடியுடன் பேசியது மிகவும் பெருமைக்குரியது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவுக்கு வருகை தர ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் இந்தியா வருவதற்கான காரணம் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது.
இதற்காக அனுமதி கோரப்பட்டுள்ளது. இதுபோல அவருடைய டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனமும் இந்தியாவில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான விடயங்களுக்கு தான் இந்தியா வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.
தற்போது அமெரிக்கா, இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எலான் மஸ்க் இந்தியா வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.