ட்விட்டர் ஊழியர்களுடன் எலான் மஸ்க் முதல் முறையாக பேச்சுவார்த்தை.. பணியாளர்களுக்கு செக்!ஏன்?

Twitter Elon Musk
By Sumathi Jun 17, 2022 08:11 AM GMT
Report

ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் முதல்முறையாக கலந்துரையாடிய டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், தனது முதல்பேச்சிலேயே ஊழியர்களை கதிகலங்க வைத்தார்.

எலான் மஸ்க்

ட்விட்டர் சமூக வலைதளத்தை 4400 கோடி டாலருக்கு வாங்கிக்கொள்வதாக எலான் மஸ்க் அறிவித்தார். ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு வாங்க விரும்புவதாகவும் பங்குச்சந்தையில் பைலிங்கில் தெரிவித்திருந்தார்.

ட்விட்டர் ஊழியர்களுடன் எலான் மஸ்க் முதல் முறையாக பேச்சுவார்த்தை.. பணியாளர்களுக்கு செக்!ஏன்? | Elon Musk To Speak To Twitter Staff First Time

இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்கிற்கும் ஒப்பந்தம் கையொப்பமானது. ஆனால், திடீரென ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் தனது முடிவை ஒத்திவைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.

ஊழியர்களுடன்  பேச்சுவார்த்தை

ட்விட்டர் நிறுவனத்தில் ஏராளமான போலிக் கணக்குகள் இருப்பதால், அதுதொடர்பாக தகவல்கள் தேவை என்று கோரியிருந்தார்.

ட்விட்டர் ஊழியர்களுடன் எலான் மஸ்க் முதல் முறையாக பேச்சுவார்த்தை.. பணியாளர்களுக்கு செக்!ஏன்? | Elon Musk To Speak To Twitter Staff First Time

ஆனால் ட்விட்டர் நிறுவனம் அந்தப் போலிக் கணக்குகள், ஸ்பாம் குறித்த விவரங்களை வழங்கவில்லை. இது தொடர்பாக பலமுறை ட்விட்டர் நிறுவனத்துக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

செலவு அதிகம்

இந்நிலைியில் சான்பிரான்சிஸ்கோ நகரில் ட்விட்டர் மூலம் எலான் மஸ்க், ஊழியர்களுடன் முதல்முறையாக கலந்துரையாடினார்.

அப்போது ஊழியர் ஒருவர் ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் நிர்வாகத்தின் கீழ் வந்தால் பணிநீக்கம் இருக்குமா என்றார் அதற்கு பதில் அளிக்கையில் இப்போது ட்விட்டரில் வருவாயைவிட செலவு அதிகமாக இருக்கிறது.

அது நிறுவனத்துக்கு உகந்தது அல்ல. ஆதலால் மாற்றங்கள் செய்யப்படும். அந்த மாற்றங்களை நினைத்து சிறந்த ஊழியர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஆட்குறைப்பு ட்விட்டரில் இருக்குமா என்ற கேள்விக்கு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எது ஆரோக்கியமானதோ அதை செய்வோம்.

சூழலைப் பொறுத்து அது அமையும். அனைத்தையும் ஒருவிதமான நியாயமான அம்சங்கள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் ட்விட்டர் வளராது.

ட்விட்டருக்கு குறிப்பிட்ட அளவு பங்களிப்பு செய்யும் ஊழியர் அது பற்றி கவலைப்படத் தேவையில்லை எனத் தெரிவித்தார்.

ஹிஜாப் அணியாத இஸ்லாமியர்கள் விலங்குகள் போன்றவர்கள்.. போஸ்டரால் சர்ச்சை!