இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு 40 நிமிடத்தில் செல்லலாம் - எலான் மஸ்கின் ஸ்டார்ஷிப் திட்டம்

United States of America Elon Musk India SpaceX
By Karthikraja Nov 17, 2024 03:01 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

டெல்லியிலிருந்து அமெரிக்காவுக்கு 40 நிமிடத்தில் செல்லலாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்

உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் Tesla, SpaceX , Starlink, X(டிவிட்டர்) போன்ற பல்வேறு நிறுவனங்களை நிறுவனங்களை நடத்தி வருகிறார். 

elon musk

பேட்டரி மூலம் இயங்கும் அவரது டெஸ்லா நிறுவன கார், டிரைவர் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும். ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம் நேரடியாக செயற்கைகோள் மூலம் இணைய சேவை வழங்கி வருகிறார். 

எலான் மஸ்கை கெட்ட வார்த்தையில் திட்டிய அதிபரின் மனைவி - மஸ்க் கொடுத்த ரியாக்சன்

எலான் மஸ்கை கெட்ட வார்த்தையில் திட்டிய அதிபரின் மனைவி - மஸ்க் கொடுத்த ரியாக்சன்

ஸ்டார்ஷிப்

இவரது SpaceX நிறுவனம் நாசா, இஸ்ரோ போன்று விண்வெளிக்கு ராக்கெட், செயற்கைகோள்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது.

இந்நிலையில், எக்ஸ் சமூக வலைதளத்தின் லோகோவை வடிவமைத்த டெஸ்லா பொறியாளர் அலெக்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், காலை 6.30 மணிக்கு நியூயார்க்கிலிருந்து பயணிகள் ஒரு கப்பலில் ஏறுகின்றனர். 

elon musk starship

அந்த கப்பல் கடலில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு வருகிறது. பயணிகள் அங்குள்ள ராக்கெட்டில் ஏற்றப்பட்டு, ராக்கெட் பறக்க தொடங்குகிறது. 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் ராக்கெட் பயணித்து 39 நிமிடத்தில் ஷாங்காய் நகரை அடைகிறது.

டெல்லி டூ சான்பிரான்சிஸ்கோ

அதன்பின் ஒவ்வொரு நகரங்களுக்கு இடையே எவ்வளவு நேரத்தில் செல்ல முடியும் என்ற தகவல் அந்த வீடியோவில் உள்ளது. இதில் டோக்கியோவிலிருந்து டெல்லிக்கு 30 நிமிடங்கள், டெல்லி-சான்பிரான்சிஸ்கோ 40 நிமிடங்கள், லண்டன்-நியூயார்க் 29 நிமிடங்கள், டோக்கியோ-டெல்லி 30 நிமிடங்கள் என பல நகரங்களுக்கான பயண நேரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் எந்த பகுதிக்கும் ஒரு மணி நேரத்திற்குள் சென்று விட முடியும் என கூறப்பட்டுள்ளது.

சில வருடங்களில் இந்த ஸ்டார்ஷிப் அனுமதி கிடைக்கலாம் என அலெக்ஸ் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவின் கீழ் 'இது இப்போது சாத்தியம்' என எலான் மஸ்க் கமெண்ட் செய்துள்ளார். தற்போது டெல்லி முதல் சான்பிரான்சிஸ்கோவிற்கு நேரடி விமானம் மூலம் செல்ல 15 மணி நேரம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.