அவமதிக்கப்பட்டாரா..? பைடனுக்கு வாக்களிக்கமாட்டேன்..! அதிரடியாக சொன்ன எலான் மஸ்க்!!

Donald Trump Joe Biden Elon Musk
By Karthick Dec 01, 2023 05:11 AM GMT
Karthick

Karthick

in உலகம்
Report

நடைபெறவுள்ள அமெரிக்கா அதிபர் தேர்தல் ஜோ பைடனுக்கு வாக்களிக்கமாட்டேன் என உலகின் பணக்காரர் எலான் மஸ்க் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்

உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் குறித்து உலக அரங்கில் அறிமுகம் தேவையில்லை. அமெரிக்காவில் வசித்து வரும் இவர், சமீபத்தில் ட்விட்டர் இணையதளத்தை வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றம் செய்துள்ளார்.

elon-musk-says-he-wont-vote-for-joe-biden-in-2024

அதே போல, பொதுவெளியில் அவ்வப்போது மஸ்க் கூறும் சில கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாக மாறி, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தும். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி எலான் மஸ்க் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்று தற்போது உலக அரசியலில் உற்றுநோக்கப்படுகிறது.   

உள்ளே கொட்டிய மழை..!! ஆனா பஸ்'ல இல்ல விமானத்தில் !! நம்பலனா வீடியோ பாருங்க

உள்ளே கொட்டிய மழை..!! ஆனா பஸ்'ல இல்ல விமானத்தில் !! நம்பலனா வீடியோ பாருங்க

அந்த பேட்டியில், எலான் மஸ்க் வரும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிப்பதை தனது கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது என கூறியிருக்கின்றார். அப்படியென்றால், அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்புக்கு வாக்களிப்பீர்களா என்று கேட்டதற்கு, இந்த முடிவு டிரம்ப்-கான ஆதரவை குறிக்காது என தெரிவித்துள்ளார்.இதற்கு ஒரு காரணமும் உள்ளது.

elon-musk-says-he-wont-vote-for-joe-biden-in-2024

அது என்னவென்றால், மின்சார வாகனங்களுக்கான உச்சி மாநாடு அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொள்ள டெஸ்லா நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் தான் அவமதிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.