அடுத்த அதிபர் தேர்தலில் எலான் மஸ்க் போட்டியா? அவரே கொடுத்த விளக்கம்

Donald Trump United States of America Elon Musk US election 2024
By Karthikraja Oct 22, 2024 10:30 PM GMT
Report

அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.

அதிபர் தேர்தல்

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். 

donald trump vs kamala harris

இந்த தேர்தலில் டொனால்டு டிரம்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவரின் பிரச்சாரத்திற்காக பல கோடிகளை வாரி வழங்கி உள்ளார். 

இதை செய்தால் தினமும் ஒருவருக்கு 8 கோடி பரிசு - எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு

இதை செய்தால் தினமும் ஒருவருக்கு 8 கோடி பரிசு - எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு

எலான் மஸ்க்

இந்நிலையில் அவர் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில், 2028 அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "என்னுடைய தாத்தா அமெரிக்கர். ஆனால், நான் பிறந்தது ஆப்பிரிக்காவில். அதனால் என்னால் தேர்தலில் போட்டியிட முடியாது. எனக்கும் அதிபர் ஆக வேண்டாம். ராக்கெட் மற்றும் வாகனங்களைத்தான் உற்பத்தி செய்ய வேண்டும்.

elon musk

விண்வெளி ஆராய்ச்சியிலும், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன். மக்களுக்கு உதவிக்கரமான தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும். டிரம்ப் அதிபராக ஆக வேண்டும் என்று விரும்புகிறேன். அவர், அதிபர் நான் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று நம்புகிறேன்" என பேசியுள்ளார்.