உலகின் முதல் பணக்காரர் எலான் மஸ்க்கிற்கு இப்படி ஒரு நோயா? அவரே சொன்ன தகவல்

Autism Elon Musk
By Karthikraja Feb 16, 2025 10:00 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

அவரே சொன்ன தகவல் தான் அஸ்பெர்கர் என்னும் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்

உலக பணக்கார பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்(Elon Musk). இவர் Tesla, SpaceX, Starlink, X உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். 

எலான் மஸ்க் ஆட்டிசம்

மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அரசாங்கத்தின் செலவுகளை குறைப்பதற்காக புதிதாக அரசாங்க செயல்திறன் துறையை(DOGE) உருவாக்கி அதன் தலைமை பொறுப்பில் எலான் மஸ்கை நியமித்தார். 

இந்தியாவிற்கு எதிர்காலத்தில் வர உள்ள பெரிய ஆபத்து - எலான் மஸ்க் எச்சரிக்கை

இந்தியாவிற்கு எதிர்காலத்தில் வர உள்ள பெரிய ஆபத்து - எலான் மஸ்க் எச்சரிக்கை

ஆட்டிசம்

இந்த நிலையில் அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் Saturday Night Live என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எலான் மஸ்க், தான் அஸ்பெர்கர்(asperger) என்னும் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட்டுள்ளதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

elon musk asperger autism

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் என்னால் பிறரின் கண்களை பார்த்து பேச முடியாது. என் பேச்சும், போஸ்டுகளும் குழப்பமானதாக இருப்பதற்கு காரணம் இதுதான் என கூறியுள்ளார். இந்த ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பிறரின் கண்களை பார்த்து பேச முடியாது. இவர்களால் நகைச்சுவை மற்றும் மற்றவர்களின் வலி போன்ற உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது.

அதே நேரம் இந்த ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு விசயத்தில் அதிக கவனத்தை செலுத்துவார்கள். மற்றவர்களை போல் இவர்களுக்கு கவன சிதறலுக்கு ஏற்படாது. இவர்கள் ஒரு விசயத்தை தீர்மானித்து விட்டால் அதை நுட்பமாகச் செய்து முடித்தே தீருவார்கள். அப்படி சிறு வயதில் சக மாணவர்களால் எள்ளி நகையாடப்பட்ட எலான் மஸ்க் தற்போது உலகின் முதல் பணக்காரராக உருவெடுத்துள்ளார்.