டெய்லர்..அது நடந்தால் நான் உங்களுக்கு குழந்தை தருவேன் - எலான் மஸ்க் மோசமான பதில்!
கமலா ஹாரிஸுக்கு டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரவளித்தது குறித்து எலான் மஸ்க் மோசமாக பதிலடி கொடுத்துள்ளார்.
டெய்லர்
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதையோட்டி டொனால்ட் ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் இடையிலான நேரடி விவாதம் நடைபெற்றது. அதன்பிறகு, பிரபல பாப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு தான் எனது வாக்கு” என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெய்லர் ஸ்விஃப்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “உங்களைப் போல நானும் இரவு நடந்த விவாதத்தை பார்த்தேன். நான் கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்கிறேன்.
ஏனென்றால் அவர் உரிமைகளுக்காக போராடுகிறார். அவர் ஒரு நிலையான, திறமையான தலைவர் என நான் நினைக்கிறேன். நாம் குழப்பமில்லாமல், அமைதியான முறையில் வழிநடத்தப்பட்டால் இந்த நாட்டில் இன்னும் பலவற்றை சாதிக்க முடியும் என நான் நம்புகிறேன்.
எலான் மஸ்க்
தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் டிம் வால்ஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மேலும் அவரின் அந்த முடிவால் நான் ஈர்க்கப்பட்டேன்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டெய்லர் ஸ்விஃப்ட் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளித்துள்ளதை விமர்சிக்கும் வகையில் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ஃபைன் டெய்லர்... நீங்கள் வெற்றி பெற்றால்... நான் உங்களுக்கு ஒரு குழந்தை தருகிறேன். மேலும், உங்கள் பூனைகளையும் நான் எப்போதும் பாதுகாப்பேன் என்று பதிவிட்டுள்ளார். எலான் மஸ்கின் இந்தப் பதிவுக்கு பலரும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.