செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக உயிரணு தானம் செய்த எலான் மஸ்க்? - அவரே அளித்த பதில்
செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக எலான் மஸ்க் உயிரணுவை தானம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
செவ்வாய் கிரகம்
உலக முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் எக்ஸ், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், தி போரிங் கம்பெனி போன்ற நிறுவனங்களை நடத்தி வருகிறார். இதில் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளை செய்து வரும் நிறுவனமாகும்.
மேலும் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்து செல்லும் ஆராய்ச்சியில் நீண்ட காலமாக ஸ்பேஸ்எக்ஸ் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று, “செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர்வாழும் சூழலை ஆராய ஸ்பேஸ்எக்ஸில் பணிபுரிபவர்களுக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உத்தரவிட்டிருக்கிறார்.
எலான் மஸ்க்
இந்த ஆராய்ச்சியில் செவ்வாய் கிரகத்தில் மனித இனப்பெருக்கத்தின் சாத்தியக்கூறுகள் குறித்தவையும் அடங்கும். இந்த ஆராய்ச்சிக்காக மஸ்க், தனது சொந்த உயிரணுவை வழங்கியுள்ளார்" என்று கூறியுள்ளது. ஆனால், எலான் மஸ்க் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
Best to hear it in the words I have used in many interviews over the years.
— Elon Musk (@elonmusk) July 11, 2024
I have not fwiw “volunteered my sperm” ?
No one at SpaceX has been directed to work on a Mars city. When people have asked to do so, I’ve said we need to focus on getting there first.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்த எலான் மஸ்க், "அந்த செய்தியில் உண்மைத்தன்மை இல்லை என்றும், அவர் அவ்வாறு உயிரணுக்களை தானமாக அளிக்கவில்லை. செவ்வாய் கிரகத்தில் பணிபுரிய ஸ்பேஸ்எக்ஸில் இருந்து எவரும் அனுப்பப்படவில்லை. மக்கள் அவ்வாறு செய்யுமாறு கேட்டபோது, முதலில் அங்கு செல்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் கூறினேன்." என கூறி மறுத்துள்ளார்.