2வது நபருக்கு மூளையில் சிப்; இனி செல்போனே வேண்டாம் - எலான் மஸ்க் தகவல்!
இரண்டாவது நபருக்கு மூளை சிப்பினை பொருத்தியுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மூளையில் சிப்
எலான் மஸ்க் நிறுவனமான நியூராலிங்க் மனித மூளைக்கும் கம்ப்யூட்டருக்கும் உள்ள தொடர்பை உருவாக்க மின்னணு சாதனமான சிப் ஒன்றை பொருத்தும் சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஜனவரியில் முதல் முறையாக சோதனை அடிப்படையில், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட 29 வயதான நோலண்ட் என்ற நபருக்கு சிப் பொருத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் கணினியை இயக்கமுடிவதாகத் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் தகவல்
இந்நிலையில், 2வதாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு சிப் பொருத்தப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும், இரண்டாவது நபரின் மூளையில் இம்பிளான்ட் செய்யப்பட்ட 400 எலக்ட்ரோடுகள் செயல்பட்டு வருகிறது. சிக்னல்கள் அதிகம் கிடைக்கிறது.
இந்த இம்பிளான்ட் பணி சிறப்பாக நடந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் தங்களது கிளினிக்கல் ட்ரையலின் (மருத்துவ சோதனை) முயற்சியாக மேலும் எட்டு பேரின் மூளையில் சிப் பொருத்த முடியும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குரங்குகளின் மூளையில் சிப் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.