FACT CHECK: எலான் மஸ்க்குக்கு முடிவெட்டிய ரோபோ? வைரலாகும் வீடியோ
எலான் மஸ்க் ரோபோவிடம் முடி வெட்டி கொண்டது போன்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.
எலான் மஸ்க்
பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். எக்ஸ் வலைத்தளம், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் நிறுவனர்.
இந்நிலையில், எலான் மஸ்க் ரோபோ உதவியுடன் முடி திருத்தம் செய்வது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோ உண்மையா?
ஆனால் இதன் உண்மை தன்மையை ஆராய்ந்ததில், எலான் மஸ்க் ரோபோ பயன்படுத்தி முடி வெட்டியதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இது ஏஐ கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ. இந்த வீடியோவில் எலான் மஸ்க் கண் சிமிட்டாமல் உள்ளார்.
@Tesla_Optimus Robot.
— Ben Mukanirwa 🇨🇩 (@benmukanirwa) December 18, 2024
Designed to automate tasks and revolutionize industries.@elonmusk I have been reluctant to say that you’re a real GOAT.@Tesla pic.twitter.com/IMP65z9PNK
மேலும் ரோபோ முடி வெட்டும்போது அதன் கை பகுதியை தெளிவாக காண முடியவில்லை. இதன்மூலம், எலான் மஸ்க், ரோபோ உதவியுடன் முடி வெட்டுவது போன்று பரவும் வீடியோ போலியானது என்பது தெரியவந்துள்ளது.