பெயரை மாற்றி கொண்ட எலான் மஸ்க் - பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

Elon Musk Cryptocurrency X
By Karthikraja Dec 31, 2024 02:00 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

 தொழிலதிபர் எலான் மஸ்க் தனது எக்ஸ் கணக்கின் பெயரை மாற்றியுள்ளார்.

எலான் மஸ்க்

உலக பணக்கார பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் தொழிலதிபர் எலான் மஸ்க். இவர் Tesla, SpaceX, Starlink, X உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். 

elon musk Kekius Maximus

கடந்த 2022 ஆம் ஆண்டு டிவிட்டர்(Twitter) சமூக வலைத்தளத்தை 55 பில்லியன் அமெரிக்கா டாலருக்கு (இந்திய மதிப்பில் 3.75 லட்சம் கோடி) விலைக்கு வாங்கிய எலான் மஸ்க், அதன் பெயரை எக்ஸ் என மாற்றியதோடு எக்ஸ் தளத்தில் பல்வேறு மாற்றங்களை செய்தார். 

சொந்த நிறுவனத்திற்குள்ளேயே நுழைய தடையா? - எலான் மஸ்கிற்கு வந்த சோதனை

சொந்த நிறுவனத்திற்குள்ளேயே நுழைய தடையா? - எலான் மஸ்கிற்கு வந்த சோதனை

பெயர் மாற்றம்

இந்நிலையில் எக்ஸ் தளத்தில் தன்னுடைய பெயரை Kekius Maximus என மாற்றியுள்ளார். மேலும் தன்னுடைய ப்ரொபைல் படத்தில் மீம்களில் இடம்பெரும் Pepe the Frog என்னும் தவளை படத்தை வைத்துள்ளார். அந்த தவளையானது தங்கக் கவசத்தை அணிந்து வீடியோ கேம் கன்ட்ரோலரை வைத்திருப்பதாக அந்த படம் உள்ளது. 

elon musk name change Kekius Maximus

Kekius Maximus என்றால் என்ன என்று பலரும் தேடி வருகின்றனர். Kekius Maximus என்பது மீம் அடிப்படையிலான கிரிப்டோகரன்சி டோக்கனின் பெயர் ஆகும். 24 மணி நேரத்துக்கு முன்னதாக இந்த கிரிப்டோகரன்சி டோக்கனின் மதிப்பு தோராயமாக $0.09988 (ரூ. 8.5) என்ற அளவில் இருந்தது.

தற்போது இதன் மதிப்பு 866.0 சதவீதம் உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் $72,067,527 அளவிற்கு Kekius Maximus டோக்கன் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்த பெயர் மாற்றம் மூலம் எலான் மஸ்க் Kekius Maximus கிரிப்டோகரன்சியில் ஆர்வம் காட்டுவதாக நினைத்து பலரும் இதில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.