சொந்த நிறுவனத்திற்குள்ளேயே நுழைய தடையா? - எலான் மஸ்கிற்கு வந்த சோதனை
எலான் மஸ்க்கிற்கு அவரது நிறுவனத்தின் குறிப்பிட்ட பகுதிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க்
உலக பணக்கார பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க். இவர் Tesla, SpaceX, Starlink, X உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது, விண்வெளி ஆராய்ச்சி துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. வணிக முறையில் தொழில்முறை விண்வெளி வீரர் அல்லாதவர்களை விண்வெளியில் நடைபயணம் செய்ய வைத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை படைத்தது.
அனுமதி மறுப்பு
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது அமெரிக்கா பாதுகாப்புத் துறையுடன் உளவு செயற்கைகோள் சேவை வழங்க ஸ்டார் ஷீல்டு(Star Shield) என்ற திட்டத்தின் கீழ் $5.32 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தங்களைக் செய்துள்ளது.
இந்த குறிப்பிட்ட பணிகள் நடைபெறும் இடத்திற்கு, 400 ஊழியர்களுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளரான எலான் மஸ்கிற்கு இந்த அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காரணம்
அவருக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளதோடு, ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களோடு தகவல் தொடர்பு இருப்பதை காரணம் காட்டி அவருக்கு இந்த அனுமதியை வழங்க சிக்கல் எழுந்துள்ளது.
ஆனால் ஜனவரி மாதத்தில் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதிவியேற்க உள்ள நிலையில் அவரது ஆட்சி காலத்தில் இந்த அனுமதியை பெறுவதில் எலான் மஸ்கிற்கு எந்த சிக்கலும் ஏற்படாது என கூறப்படுகிறது. டொனால்ட் டிரம்ப்பின் புதிய அரசாங்கத்தில் DOGE என்னும் முக்கிய துறையின் தலைமை பொறுப்பில் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டுள்ளார்.