அரசியலில் களமிறங்கும் எலான் மஸ்க்? கருத்தால் எகிறும் எதிர்பார்ப்பு!
எலான் மஸ்க் ஜோ பைடன் மற்றும் டொனால்ட் ட்ரம்பை ஆதரிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்
எலான் மஸ்க் பிரபல இதழ் சார்பிலான ’டீல்புக் உச்சி மாநாட்டில்’ பங்கேற்றார். அதில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ஜோ பைடனுக்கு வாக்களிப்பதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை என்றார்.
பைடன் - ட்ரம்ப் என இருமுனை போட்டி அமைந்தால் யாருக்கு உங்கள் வாக்கு? இது மிகவும் கடினமான தெரிவு. முந்தைய தேர்தலில் ஜோ பைடனுக்கு தான் வாக்களித்தேன் என வெளிப்படையாகக் கூறினார்.
அரசியல் பிரவேசம்?
அண்மையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற மின்சார வாகனங்களுக்கான மாநாடு ஒன்றுக்கு டெஸ்லா நிறுவனம் அழைக்கப்படாமல் இருந்த நிலையில் மஸ்க் அதிருப்தியில் இருந்தார். தொடர்ந்து, வெள்ளை மாளிகையுடன் தீவிரமாக முரண்பட்டு வருகிறார்.
இதனால், இவரது ஆதரவாளர்கள் அவர் நேரடி அரசியலில் ஈடுப்படபோவதாக தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, நீங்களே ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி விடுங்கள் என பயனர் ஒருவர் கூறிய நிலையில் மஸ்க் நிஜமாகவே ட்விட்டரை வாங்கியது குறிப்பிடத்தக்கது.