எலான் மஸ்க் அமெரிக்க அதிபராக முடியாது.. ஏனென்றால்..வெளிப்படையாக சொன்ன டிரம்ப்!
எலான் மஸ்க் அமெரிக்க அதிபராக முடியாது என்று டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எலான் அதிபர்?
உலக பணக்கார பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க். இவர் Tesla, SpaceX, Starlink, X உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக தேர்வானார்.
அவரின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர்களில் மிக முக்கிய நபராக எலான் மஸ்க் இருந்தார். டிரம்ப் தனது வெற்றி உரையில், எங்களிடம் ஒரு புதிய நட்சத்திரம் இருக்கிறது, அந்த நட்சத்திரம் எலான். அவர் அற்புதமான நபர். நெருங்கிய நண்பர்" என கூறியிருந்தார்.
டிரம்ப்
இதை தொடர்ந்து, டிரம்ப் அதிபரான பிறகு எலான் மஸ்க்குக்கு பதவி வழக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த சூழலில், அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் குடியரசுக் கட்சியின் மாநாடு நடைப்பெற்றது. அதில் டொனால்ட் டிரம்ப்பிடம் எலான் மஸ்க் அமெரிக்க அதிபராக முடியுமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அமெரிக்காவின் அதிபராக முடியாது. அதை உங்களுக்கு உறுதியாகச் சொல்ல முடியும். ஏன் தெரியுமா? தென்னாப்பிரிக்காவில் பிறந்த டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் முதலாளி
இந்த நாட்டில் (அமெரிக்காவில்) பிறக்கவில்லை. அமெரிக்க அரசியலமைப்பு ஒரு ஜனாதிபதி இயற்கையாக பிறந்த அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறது. என்று தெரிவித்துள்ளார்.