பணிக்கு வந்த பெண் ஊழியர்கள்..அடிக்கடி பாலியல் உறவு - புதிய சர்ச்சையில் எலான் மஸ்க்!

Sexual harassment Elon Musk SpaceX Tesla World
By Swetha Jun 13, 2024 07:03 AM GMT
Report

எலான் மஸ்க் அடிக்கடி பெண் ஊழியரை பாலியல் உறவுக்கு அழைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

எலான் மஸ்க்

உலகில் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியாவார்.அங்கு பயிற்சிப் பணிக்கு வந்த பெண் உள்பட இரண்டு ஊழியர்களுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாகவும், மற்றொரு பணியாளரை தனது குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பணிக்கு வந்த பெண் ஊழியர்கள்..அடிக்கடி பாலியல் உறவு - புதிய சர்ச்சையில் எலான் மஸ்க்! | Elon Musk Asked Women Workers To Bed Claims Report

இது தொடர்பாக வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்துகொண்டாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் எலான் மஸ்க் இதுபோல பல குற்றச்சாட்டுகளைச் சந்தித்துள்ளார்.

 தனது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை சில சமயங்களில் கொகைன், கெட்டமைன் போன்ற போதைமருந்துகளை பயன்படுத்த வற்புறுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. பாலியல் துன்புறுத்தல் ஜோக்குகளைக் கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்றும்

பணிக்கு வந்த பெண் ஊழியர்கள்..அடிக்கடி பாலியல் உறவு - புதிய சர்ச்சையில் எலான் மஸ்க்! | Elon Musk Asked Women Workers To Bed Claims Report

ஆண்களை விட பெண்களுக்கு குறைவான ஊதியமே கொடுக்கிறார் என்றும் புகார் செய்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெஸ்லாவில் உள்ள பெண் ஊழியர்களை எலான் மஸ்க் அசாதாரண அளவுக்கு பின்தொடர்வதாகக் கூறப்பட்டுள்ளது.

14 வயது சிறுவனுக்கு எலான் மஸ்க் Space X நிறுவனத்தில் வேலை - என்ன காரணம்?

14 வயது சிறுவனுக்கு எலான் மஸ்க் Space X நிறுவனத்தில் வேலை - என்ன காரணம்?

பெண் ஊழியர்கள்

2016ஆம் ஆண்டு தன்னை உடலுறவுக்கு அழைத்து, அதற்கு ஈடாக ஒரு குதிரை வாங்கித் தருவதாகக் கூறினார் என்று ஸ்பேஸ்எக்ஸ் விமானப் பணிப்பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.2013இல் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்த மற்றொரு பெண்,

பணிக்கு வந்த பெண் ஊழியர்கள்..அடிக்கடி பாலியல் உறவு - புதிய சர்ச்சையில் எலான் மஸ்க்! | Elon Musk Asked Women Workers To Bed Claims Report

எலான் மஸ்க் பல சந்தர்ப்பங்களில் தனது குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும்படி கேட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். உலகம் குறைவான மக்கள்தொகையால் நெருக்கடியில் இருக்கிறது என்றும் அதிக புத்திக்கூர்மை உள்ளவர்கள் நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணை எலான் மஸ்க் அடிக்கடி இரவில் தன் வீட்டிற்கு வருமாறு அழைத்தார் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், எலான் மஸ்க்கின் வழக்கறிஞர் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

அவர், புகார்களில் கூறப்படும் தகவல்கள் எதுவும் உண்மையானவை அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். அவை பொய்கள் மூலம் தவறான கதையை சித்தரிக்கின்றன.எலான் மஸ்க் எனக்குத் தெரிந்த சிறந்த மனிதர்களில் ஒருவர் என்றும் தெரிவித்துள்ளார்.