இனி விளம்பரம் இல்லாத ட்விட்டர் - எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி!
ட்விட்டரில் விளம்பர பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் விளம்பரம்
டெஸ்லா கார் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடி விலைக்கு வாங்கியபின், அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். ட்விட்டரின் சிஇஓ பராக் அகர்வால் உள்ளிட்ட பல்வேறு மூத்த அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர்.

அடுத்தபடியாக ட்விட்டர் நிறுவனத்தின் செலவைக் குறைக்கும் வகையில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் நீக்கப்பட்டனர். இதில் ஏறக்குறைய 3500க்கும் மேலான ஊழியர்கள் எந்தவிதமான முன்அறிவிப்பும் இன்றி நீக்கப்பட்டனர். இதற்கு அடுத்த படியாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், "டிவிட்டரில் விளம்பரங்கள் மிகவும் பெரிய அளவிலும், அடிக்கடியும் வருகிறது.
அடுத்த Move
வரும் வாரங்களில் இந்த இரண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என பதிவிட்டுள்ளார். டிவிட்டர் நிறுவனத்தில் வருவாய் விளம்பரத்தை மட்டுமே நம்பி இருக்க கூடாதெனவும், பயனர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில்,
இந்நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார் .
விளம்பரம் இன்றி ட்விட்டர் தளத்தை அணுகும் வகையில் புதிய சந்தாதாரர் திட்டத்தை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.