இனி ட்விட்டரில் புளு டிக் இருந்தால் கட்டணம் ? - அதிர்ச்சியில் இணையவாசிகள்

Twitter
By Irumporai Oct 31, 2022 04:37 AM GMT
Report

ட்விட்டரில் பயனர்கள் புளூ டிக் பெறுவதற்கு மாதம் ரூ 1600 பெற ட்விட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டரில் ப்ளுடிக்

 ட்விட்டர் நிறுவனம் தற்போது எலான் மஸ்கின் கைக்கு வந்த பிறகு பல அதிரடியான மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ட்விட்டரின் முக்கிய அதிகாரிகள் பதவி விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

அதே சமயம் ட்விட்டரில் இருக்கக்கூடிய சிலரின் வேலைகள் பறிபோகும் நிலையும் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் அரசியல்வாதிகள் .சினிமா பிரபலங்கள் என பலரும்  தங்கள் ட்விட்டர் அக்கவுண்ட்டில் புளு டிக் பெறுவதை விருப்பமாக கொண்டுள்ளனர் .

ப்ளுடிக் பெற காசு

இதன் மூலம் ட்விட்டரில் தங்கள் கணக்கு அதிகாரபூர்வமாக உள்ளதாக கருதப்படுகிறது . ட்விட்டரில் புளூ டிக் பெறுவதற்காக பயனர்கள் 4.99 அமெரிக்க டாலர்கள் வரை செலுத்த வேண்டியிருக்கும் இதன் மூலம் ட்விட்டரில் பல்வேறு அம்சங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

இனி ட்விட்டரில் புளு டிக் இருந்தால் கட்டணம் ? - அதிர்ச்சியில் இணையவாசிகள் | Twitter Is Planning To Start Charging Blue Tick

குறிப்பாக ட்விட்டரில் எடிட் செய்யும் ஆற்றலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் கணக்கை உறுதிப்படுத்துவதற்காக  ப்ளூ டிக் பெறுவதற்கு  பயனர்கள் மாதம்தோறும் ரூபாய் 1600 வரை கட்டணம் வசூலிக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

கலக்கத்தில் ட்விட்டர்வாசிகள்

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது, இந்த நிலையில் அறிவிப்பு வெளியான 90 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தவில்லை என்றால் ப்ளுடிக் உள்ள ட்விட்டர் பயனரின் ப்ளு டிக்  பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது .

ட்விட்டர் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லையென்றாலும் ,இந்த தகவல் ட்விட்டர்வாசிகளிடம் பதட்டத்தை அதிகமாக்கியுள்ளது.