யூடியூப்க்கு போட்டியா.. இனி ட்விட்டரிலும் சம்பாதிக்கலாம் - அதிரடி அறிவிப்பு!

Twitter Elon Musk
By Sumathi Jul 30, 2023 10:11 AM GMT
Report

ட்விட்டர் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர்

எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடி விலைக்கு வாங்கியபின், அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். செலவினங்களைக் குறைப்பதற்காக பல ஊழியர்களை பனி நீக்கம்.

யூடியூப்க்கு போட்டியா.. இனி ட்விட்டரிலும் சம்பாதிக்கலாம் - அதிரடி அறிவிப்பு! | Elon Musk Announced Income With Creators

நீல நிற டிக் வைத்திருந்த பயனர்கள் அதைத் தொடரவேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும். லோகோவை மாற்றி நாய் ஒன்றின் புகைப்படம் என அடுக்கடுக்காக எதையாவது செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அதிரடி அறிவிப்பு

தொடர்ந்து அண்மையில், ட்விட்டருக்கு எக்ஸ் என பெயர் மாற்றம் செய்து அதன் லோகோவையும் மாற்றினார். தற்போது, புதிய கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு பணத்தை நேரடியாக அளிக்கும் முறையை எக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

யூடியூப்க்கு போட்டியா.. இனி ட்விட்டரிலும் சம்பாதிக்கலாம் - அதிரடி அறிவிப்பு! | Elon Musk Announced Income With Creators

இதனிடையே வீடியோக்களுக்கு நடுவே வரும் விளம்பரத்தை மக்கள் பார்க்கும்போது கிடைக்கும் வருவாயை கிரியேட்டர்களுக்கும் பகிரும் வசதியை அறிவித்துள்ளது.

விளம்பர வருவாய் பகிரும் திட்டத்தில் பணம் பெற வேண்டுமானால் ஒருவரின் கணக்கு verify செய்யப்பட்டிருக்க வேண்டும். கடந்த 3 மாதங்களில் ஒன்றரை கோடி இம்ப்ரஷன்களை கொண்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 500 பாலோவர்களாவது இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.