ட்விட்டரின் நீலக் குருவியை எக்ஸ் (X) ஆக மாற்றிய எலான் மஸ்க் - இதெல்லாம் என்ன விளையாட்டா?

Twitter Elon Musk World
By Jiyath Jul 24, 2023 10:55 AM GMT
Report

டிவிட்டரின் லோகோ மற்றும் பெயரை மாற்றியுள்ளார் எலான் மஸ்க்.  

எலான் மஸ்க்

உலகில் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் ஆவார். கடந்த ஆண்டு இவர் டிவிட்டரை சொந்தமாக வாங்கினார். அப்போதிலிருந்தே டிவிட்டரை ஒரு விளையாட்டு பொம்மை போல் வைத்து விளையாடி வருவதையே எலான் மஸ்க் வழக்கமாக கொண்டுள்ளார்.

ட்விட்டரின் நீலக் குருவியை எக்ஸ் (X) ஆக மாற்றிய எலான் மஸ்க் - இதெல்லாம் என்ன விளையாட்டா? | Twitter Name Logo Changed By Elon Musk Ibc Tamil

டிவிட்டரை வாங்கிய பின்னர் நிறுவனத்தின் செலவினங்களைக் குறைப்பதற்காக பல ஊழியர்களை பனி நீக்கம் செய்தார். நீல நிற டிக் வைத்திருந்த பயனர்கள் அதைத் தொடரவேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்த மஸ்க் அதை நடைமுறைப் படுத்தினார். ஒருமுறை லோகோவை மாற்றி நாய் ஒன்றின் புகைப்படத்தை மஸ்க் வைத்தார்.

ஆனால் அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் பழைய லோகோவான நீல நிறக் குருவியை கொண்டு வந்தார்.

லோகோ மாற்றம்

இந்நிலையில் டிவிட்டரின் லோகோ மற்றும் பெயரை மாற்றப்போகிறோம் என்ற அறிவிப்பை வெளியிட்டார் மஸ்க். அதனைத் தொடர்ந்து டிவிட்டரின் பரிச்சயமான லோகோவான நீல நிறக் குருவியை மாற்றிவிட்டு எக்ஸ் X என மாற்றியுள்ளார் எலான் மஸ்க். இறுதியாக குருவி கூண்டை விட்டு பறந்து சென்றுள்ளது.