கோவில் விழாவில் மோதிக்கொண்ட யானைகள்; அலறியடித்து ஓடிய பக்தர்கள் - வைரல் Video!

Viral Video Kerala India Elephant
By Jiyath Mar 24, 2024 06:13 AM GMT
Report

கோவில் திருவிழாவில் 2 யானைகள் ஆக்கோரஷமாக சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

பூரம் திருவிழா

கேரளா மாநிலம் திருச்சூர் அருகே ஆராட்டுப்புழாவில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூரம் திருவிழா நடைபெற்று வந்தது. இறுதிநாளான நேற்று முன்தினம் இரவு உபசாரம் சொல்லல் நிகழ்ச்சி நடந்தது.

கோவில் விழாவில் மோதிக்கொண்ட யானைகள்; அலறியடித்து ஓடிய பக்தர்கள் - வைரல் Video! | Elephants Fight In Thrissur Pooram Festival Kerala

இதற்காக அழைத்து வரப்பட்ட ரவிகிருஷ்ணன், அர்ஜுனன் ஆகிய 2 யானைகளும் கோவிலை நோக்கி ஊர்வலமாக வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென மிரண்ட ரவிகிருஷ்ணன் யானை அங்கும், இங்கும் ஓட தொடங்கியது. யானை மிரண்டு ஓடியதால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

நோன்பு கஞ்சியோடு பல் செட்டையும் விழுங்கிய 93 வயது மூதாட்டி - மீண்டது எப்படி?

நோன்பு கஞ்சியோடு பல் செட்டையும் விழுங்கிய 93 வயது மூதாட்டி - மீண்டது எப்படி?

யானைகள் மோதல் 

யானை மீது அமர்ந்திருந்த கீழ் சாந்திகள் சிலரும் கீழே குதித்து உயிர் தப்பினர். இதனையடுத்து ரவிகிருஷ்ணன் யானையும், எதிரே நின்றிருந்த அர்ஜுனன் யானையும் ஆக்ரோஷமாக மோதி தாக்கிக்கொண்டன.

கோவில் விழாவில் மோதிக்கொண்ட யானைகள்; அலறியடித்து ஓடிய பக்தர்கள் - வைரல் Video! | Elephants Fight In Thrissur Pooram Festival Kerala

இதனை கட்டுப்பட்டடுத்த முயன்ற பாகன் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆராட்டுப்புழா போலீசார் மற்றும் வனத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி ரவிகிருஷ்ணன் யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.