பக்தரை தூக்கி எறிந்த யானை - கோவில் நிகழ்வில் நடந்த விபரீதம்
கோவில் திருவிழாவில் மதம் பிடித்த யானை பக்தரை தூக்கி வீசியுள்ளது.
மதம் பிடித்த யானை
கேரளாவின் பெரும்பாலான திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். அதே போல், கேரள மாநிலம், மலப்புரம் அருகே உள்ள திரூர் புதியங்காடியில் இருக்கும் பிபி அங்காடி ஜராம் மைதானத்தில் இரவு நடந்த திருவிழாவில் 5க்கும் மேற்பட்ட யானைகள் வரிசையாக நிற்கவைக்கப்பட்டிருந்தன.
நள்ளிரவு 12.30மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்வில் அதிகாலை 2.15 மணியளவில், பாக்கத் ஸ்ரீகுட்டன் என்ற யானைக்கு திடீரென மதம் பிடித்துள்ளது.
ஒருவர் பலி
யானை திடீரென கூட்டத்தில் புகுந்ததில், அதிர்ச்சிடைந்த மக்கள் அலறி ஓட தொடங்கினர். அப்போது அங்கிருந்த ஒருவரை தும்பிக்கையால் தூக்கி எறிந்தது. இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கோட்டக்கல்லில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.