நகருக்குள் புகுந்து அட்டூலியம் செய்த காட்டு யானை - 144 தடை உத்தரவு!

Tamil nadu Elephant
By Vinothini May 28, 2023 04:05 AM GMT
Report

தேனி மாவட்டத்தில் நகருக்குள் யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது, பாதுகாப்பு கருதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காட்டு யானை

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் அருகே சின்னக்கானல், வட்டக்கானல் என்ற வனப்பகுதியில் அரிசிக் கொம்பன் என்னும் காட்டு யானையின் நடமாட்டம் அதிகம் இருந்துள்ளது.

elephant-entered-into-the-town-144-ban-order

இந்த காட்டு யானை தாக்கி இதுவரை அப்பகுதியில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இது ரேஷன் கடைகளை தாக்கி அரிசியை விருப்ப உணவாக உண்டதால் இதனை கேரளாவில் ‘அரிசிக் கொம்பன்’ யானை என்ற பெயரிட்டு அழைத்தனர்.

இதனை ஏற்கனவே மயக்க ஊசி போட்டு அதனை பிடித்து, தேக்கடி புலிகள் காப்பகத்தில் விட்டனர். அது தற்போது தப்பி வந்து நகருக்குள் புகுந்துள்ளது.

தடை உத்தரவு

இந்நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா "அரிசிக்கொம்பன் செல்லும் பகுதியில் பொதுமக்கள் இடையூறு செய்ய வேண்டாம்.

elephant-entered-into-the-town-144-ban-order

யானை அருகில் செல்வதையோ புகைப்படம், வீடியோ எடுப்பதையோ தவிர்க்க வேண்டும். அரிக்கொம்பன் யானையை பார்க்க சென்றபோது தாக்கியதில் பால்ராஜ் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.

எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யானையை பிடித்து வனப்பகுதிக்குள் விட்ட பின்பு 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும்.

அதுவரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

அரிக்கொம்பன் யானையைப் பிடிக்க ஏதுவாக அதனை ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலைநிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.