தாயின் உடல்நிலை மோசம் - தேனி விரைந்த ஓபிஎஸ்
தாய் உடல்நிலை குறித்து தகவல் அறிந்ததும் ஓபிஎஸ் தேனிக்கு விரைந்தார்.
ஓ.பன்னீர் செல்வம்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஓ.பன்னீர் செல்வம் தாயார் பழனியம்மாள்(96). இவருக்கு சர்க்கரை அளவு ரத்த அழுத்தமும் மிகவும் குறைந்ததால் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில்

தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்ட
தாயின் உடல்நிலை
ஓபிஎஸ் குடும்பத்தினர் அனைவரும் சென்னையில் இருந்து அவசரமாக சாலை மார்க்கமாக மருத்துவமனை சென்று தாயின் உடல்நிலையை கவனித்து வருகின்றனர்.
தொடர்ந்து, இதுதொடர்பாக தகவல் அறிந்து மருத்துவமனை வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் சையதுகான் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட முக்கியமான நிர்வாகிகள் காத்துள்ளனர்.
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan