ஜீப்பை ஆக்ரோஷமாக தாக்கிய ஒற்றை யானை - வைரலாகும் வீடியோ!
ஜீப்பை ஆக்ரோஷமாக ஒற்றை யானை தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஆக்ரோஷமான யானை
கோவை தொண்டாமுத்தூர், தேவராயபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு காட்டு யானை இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களை சேதப்படுத்தி வந்தது.
இது குறித்து தகவல் அறிந்த போளுவாம்பட்டி வனத்துறையினர், யானையை கண்காணித்து அதிகாலையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதிர்ச்சி வீடியோ
அப்போது தேவராயபுரம் மகாலட்சுமி கோவிலுக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதை வழியாக வனத்துறையினர் ஜீப்பில் யானையை விரட்டிச் சென்றுள்ளனர். அதில் காட்டு யானை திடீரென நின்று வனத்துறையினரின் வாகனத்தை நோக்கி ஆவேசமாக ஓடி வந்து மோதியது.
கோவை தொண்டாமுத்தூர் அருகே காட்டு யானையை விரட்ட சென்ற வனத்துறை வாகனத்தை யானை தாக்கியது.@gurusamymathi @kovaikarthee @vijay_vast @tnforestdept #Coimbatore #elephantattack#elephant pic.twitter.com/DUGMTq2Oks
— Srini Subramaniyam (@Srinietv2) August 24, 2025
இந்த மோதலில் வாகனத்தின் முன் கண்ணாடி உடைந்து சிதைந்தது. பின், வனத்துறை ஊழியர்கள் உடனடியாக வாகனத்தை பின்னோக்கி எடுத்துச் சென்று யானையிடம் இருந்து தப்பி,
தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொண்டனர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.