399 இடங்களை கைப்பற்றும் பாஜக கூட்டணி ....தமிழகத்திலும் இத்தனை இடமா..? அனல் பறக்கும் கருத்துக்கணிப்பு முடிவு

Indian National Congress DMK BJP India Lok Sabha Election 2024
By Karthick Apr 04, 2024 11:30 PM GMT
Report

மக்களவை தேர்தல் களம் நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தல்

10 ஆண்டு நிறைவு செய்யும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்திடும் நோக்கில் தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தில் நட்சத்திர வேட்பாளர்களை களமிறங்கியுள்ளது மட்டுமின்றி நாடு முழுவதிலும் அந்தந்த பகுதிகளின் நட்சத்திர வேட்பாளர்களை அக்கட்சி களமிறங்கியுள்ளது.

election-poll-opinions-bjp-winning-399-seats

இந்தியா கூட்டணியும் பெரும் சவாலான வாக்காளர்களை களமிறக்கியிருக்கும் சூழலிலும், மேற்குவங்கம் கேரளா போன்ற மாநிலங்களில் கூட்டணிக்கு சில முரண்பாடுகள் இருப்பது வெளிப்பட்டே விட்டது.

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - தூத்துக்குடி

நாடாளுமன்ற தேர்தல் - உங்கள் தொகுதி அறியுங்கள் - தூத்துக்குடி

தேர்தல் வரும் காலத்திற்கு முன்பாகவே இந்த தேர்தலில் 400 இடங்களை கைப்பற்றுவோம் என ஆணித்தரமாக பேசி வரும் பாஜக, தேர்தல் பிரச்சாரத்தில் அதனை முதன்மையான விஷயமாக பேசி வருகின்றது.

election-poll-opinions-bjp-winning-399-seats

தமிழகத்தில் பாஜக திராவிட கட்சிகள் இல்லாத கூட்டணியை அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது. அனைத்து மாநிலங்களை போலவே தமிழகத்திலும் நிறைய நட்சத்திர வேட்பாளர்கள் பாஜக சார்பில் களமிறங்கியுள்ளனர்.

399 இடங்களை....

வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய கருத்துக்கணிப்பிகள் வெளிவந்து கொண்டு இருக்கும் சூழலில் தற்போது இந்தியா டிவி நடத்திய கருத்துக்கணிப்பு வெளிவந்துள்ளது.நாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளில் பாஜகவிற்கு சாதகமாகவே முடிவுகள் உள்ளது.  

election-poll-opinions-bjp-winning-399-seats

நாடு முழுவதிலும் 399 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றும் என்றும், இந்தியா கூட்டணி 94 இடங்களே கிடைக்கும் என அந்த கருத்துக்கணிப்பில் முடிவு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு - மொத்தம் 39

திமுக - 18, காங்கிரஸ் - 8, அதிமுக - 4, பாஜக 3, பாமக -1, மற்றவை - 5 

ஆந்திரப்பிரதேசம் - மொத்தம் 25

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் - 10, தெலுங்கு தேசம் கட்சி 12, பாஜக 3

election-poll-opinions-bjp-winning-399-seats

கேரளா - மொத்தம் 20

காங்கிரஸ் - 10, இடதுசாரிகள் - 8, பாஜக - 3

கர்நாடகா - மொத்தம் 28

பாஜக - 22, காங்கிரஸ் - 4, ஜே.டி.எஸ் - 2

தெலுங்கானா - மொத்தம் 17 காங்கிரஸ் - 9, பாஜக - 5, பி.ஆர்.எஸ் - 2, ஒவைசி கட்சி - 1

புதுச்சேரி  - மொத்தம் 1

பாஜக - 1

உத்தரபிரதேசம் - மொத்தம் 80

பாஜக - 73, ஆர்.எல்.டி - 2, அப்னா தள் - 2, சமாஜ்வாதி - 3