தேர்தல் கருத்துக்கணிப்பு - தலைகீழாக மாறும் தமிழகம்..? முந்தியது யார்..?
நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்களில் தமிழகத்தில் கிடைக்கும் என்ற தேர்தல் முந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
தேர்தல் கருத்துக்கணிப்பு
தனியார் தொலைக்காட்சி, ஏபிடி நிறுவனம் மற்றும் "The federal" செய்தி நிறுவனம் இணைந்து இந்த கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடம் மற்றும் வாக்கு சதவீதம் போன்றவை வெளியிடப்பட்டுள்ளன.
வாக்கு சதவீதம்
திமுக கூட்டணி 38.83 (2019-இல் 53.32%)
அதிமுக 17.26 (2019-இல் 17.26%)
பாஜக 18.48 (2019-இல் 3.71%)
நாம் தமிழர் 7.26 (2019-இல் 7.26%)
பிற கட்சிகள் - பாமக 2.81%, தேமுதிக 2.17, மநீம 0.67, புதிய தமிழகம் 0.64, மற்றவை 5.41%, கருத்து இல்லை 6.96 %.
எத்தனை தொகுதிகள்
இந்த கருத்துக்கணிப்பின் படி, வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 29 முதல் 31 இடங்களும், பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு 4 முதல் 6 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
சென்ற 2019-ஆம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களையும், அதிமுக ஒரு இடத்தையும் கைப்பற்றியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.