தேர்தல் நாள்: ஊதியத்துடன் பொது விடுமுறை - தேர்தல் ஆணையம் உத்தரவு
தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம்
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
ஊதியத்துடன் விடுமுறை
அந்த வகையில், ஒவ்வொரு கட்டத்தின் வாக்குப்பதிவு நாளான்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.
மேலும், மற்ற மாநிலங்களுக்கும் தனியார், அரசு நிறுவனங்களில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-ம் கட்டமாக நடைபெறும் தேர்தல்கள் ஏப்.26-ம் தேதி நடைபெறும் எனவும், 3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும்,
6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.