நா.த.க'க்கான பதிலா..? அங்கீகாரமற்ற கட்சியின் சின்னம் மாறும் - தலைமை தேர்தல் ஆணையர்
நாம் தமிழர் கட்சி தேர்தல் சின்னம் குறித்து சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில், இன்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார் கருத்துக்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
நாம் தமிழர் விவகாரம்
தமிழகத்தில் கரும்பு - விவசாயி சின்னத்தை கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றது நாம் தமிழர் கட்சி.
2016, 2021 ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல், 2021-ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தல் போன்றவற்றில் போட்டியிட்டுள்ள அக்கட்சிக்கு தற்போது சின்னம் கிடைப்பது சற்று சிக்கலாக இருக்கின்றது.
அங்கீகாரமற்ற..
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பேசும் போது, அங்கீகாரமற்ற கட்சிகளின் சின்னம் மாறுதலுக்கு உட்பட்டது தான் என தெரிவித்திருந்தார்.
இது நாம் தமிழர் கட்சியின் விவகாரம் பொருட்டே தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கட்சி சின்னத்தை மீண்டும் பெறுவோம் என்ற நம்பிக்கையில் நாம் தமிழர் சீமான் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இன்னும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நாம் தமிழர் உருவாகவில்லை என்பதே.