தட்டிய சத்தம்; சவப்பெட்டிக்குள் இருந்து உயிரோடு எழுந்த 76 வயது மூதாட்டி - அதிர்ச்சி வீடியோ!
சவப்பெட்டிக்குள் இருந்து மூதாட்டி உயிரோடு எழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவப்பெட்டிக்குள் மூதாட்டி
ஈக்வடார், பாபாஹோயோ என்ற கடற்கரை நகரைச் சேர்ந்தவர் மோன்டோயா(76). இந்த மூதாட்டி மூதாட்டி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதனையடுத்து, 2 நாட்கள் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இருந்தது. பின்னர், வழக்கப்படி சவப்பெட்டிக்குள் மூதாட்டி உடல் வைக்கப்பட்டது. இறுதி சடங்கின் போது, எதிர்பாராதவகையில், சவப்பெட்டியை உள்ளிருந்து தட்டும் சத்தம் கேட்டுள்ளது.
அதிர்ச்சி வீடியோ
அதிர்ச்சியில், பெட்டியை திறந்தபோது மூதாட்டி உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார்.
A 76 year-old #Ecuador|ian women wakes up during her funeral. pic.twitter.com/1dOmnXcDkP
— The World Monitor (@tworldmonitor) June 13, 2023
அங்கு உயிர் காக்கும் கருவி மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.