4 ஆண்டுகளாக கெடாமல் இருக்கும் இறந்த கன்னியாஸ்திரி உடல் - படையெடுக்கும் மக்கள்!
இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் கன்னியாஸ்திரி உடல் கெடாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாஸ்திரி உடல்
அமெரிக்காவின் மிசோரியில் இருக்கும் ஒரு தேவாலயத்தில் சேவையாற்றி வந்த சிஸ்டர் வில்ஹெல்மினா லான்காஸ்டர். இவர் தனது 95 வயதில் இறந்தார். அவரை ஒரு மர சவப்பெட்டிக்குள் வைத்து அடக்கம் செய்திருக்கின்றனர்.
இந்நிலையில், தேவாலய வழக்கப்படி அவரது உடலை தேவாலயத்துக்குள் புதைக்க தோண்டி எடுத்துள்ளனர். அப்போது சவப்பெட்டியில் விழுந்த சிறு துளையால் இறந்த கன்னியாஸ்திரியின் கால் பகுதி தெரிந்திருக்கிறது.
ஆச்சர்ய சம்பவம்
அதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரது கால் பகுதி அப்படியே இருந்திருக்கிறது. அதன் பிறகு சவப்பெட்டியைத் திறந்து பார்த்திருக்கின்றனர். அவர் புதைக்கப்பட்டபோது எப்படி இருந்தாரோ அப்படியே நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் இருந்துள்ளார்.
உடனே இந்தச் செய்தி நகரம் முழுவதும் பரவியிருக்கிறது.
இதனால், தேவாலயத்துக்கு மக்கள் படையெடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். நீண்ட வரிசையில் நின்று சிஸ்டர் வில்ஹெல்மினா லான்காஸ்டர் உடலைப் பார்த்துச் செல்கின்றனர்.