முதியவரை அடித்தே கொன்ற குடும்பத்தினர் - பதற வைக்கும் வீடியோ!

Attempted Murder Viral Video Crime
By Sumathi Aug 08, 2022 11:29 AM GMT
Report

 முதியவர் ஒருவர் கம்பத்தில் கட்டி வைத்து அடித்தே கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடும்ப பிரச்சனை 

ஒடிசாவில் உள்ள கோராபுட் மாவட்டத்தை சேரந்தவர் குர்ஷா மணியக்கா. குர்ஷா மணியக்காவுக்கும் அவரது மகனுக்கும் எதோ ஏற்கனவே தகராறு இருந்துள்ளது. அப்போது குர்ஷா மணியக்கா தனது மகனின் வீட்டில் இருந்த மேற்கூரையின் ஒரு பகுதியை உடைத்ததாகக் கூறப்படுகிறது.

முதியவரை அடித்தே கொன்ற குடும்பத்தினர் - பதற வைக்கும் வீடியோ! | Elderly Man Tied To Pole Thrashed To Death Odisha

இதில் இரு தரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் கைகலப்பாகவும் முற்றி உள்ளது. அப்போது மணியக்காவின் அண்ணன், மகன் மற்றும் மருமகள் ஆகியோர் சேர்ந்த அவரை தாக்கத் தொடங்கி உள்ளனர்.

முதியவர்  உயிரிழப்பு

அவரை அங்கிருந்த மின்கம்பம் ஒன்றில் கட்டிய அவர்கள், மரக் கட்டைகளைக் கொண்டு தாக்கி உள்ளனர். இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதில் இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் அந்த முதியவரை இரக்கமின்றி மாறி மாறி அடித்துள்ளனர்.

முதியவரை அடித்தே கொன்ற குடும்பத்தினர் - பதற வைக்கும் வீடியோ! | Elderly Man Tied To Pole Thrashed To Death Odisha

முதியவர் மின் கம்பத்தில் கட்டப்பட்டு இருந்ததால், அவரால் இந்தத் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் அந்த முதியவர் வலி தாங்க முடியாமல் காலை தூக்கிக் கொண்டு கதறி அழுகிறார்.

 போலீஸார் வலைவீச்சு 

ஒரு கட்டத்தில் அப்படியே மயங்கி விடுகிறார். அப்போதும் அவரை விடாத அந்த பெண் முதியவரின் தோள்பட்டையில் பலமாக அடிக்கிறார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், அப்பகுதி மக்கள் உதவியுடன் அவரது உடலைத் தகனம் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார் ஒருவரைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரைத் தேடி வருகின்றனர்.