Tuesday, Apr 29, 2025

ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை - அதிர்ச்சி பின்னணி!

Bengaluru Death
By Sumathi a year ago
Report

ஜன்னல் கம்பியில் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தம்பதி தற்கொலை

கர்நாடகா, பெங்களூரு பனசங்கரியில் கிருஷ்ணா நாயுடு(84), அவரது மனைவி சரோஜா(74) ஆகியோர் வசித்து வந்தனர். ஆந்திராவைச் சேர்ந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வந்தனர்.

கிருஷ்ணா நாயுடு - சரோஜா

இவர்கள் வசித்து வந்த வீட்டின் மற்றொரு தளத்தில் மகன் அசோக் மற்றும் மருமகள் வசித்து வந்தனர். இந்நிலையில், அவர்களது வீட்டிற்கு நண்பர் ஒருவர் வந்துள்ளார். அப்போது, ஜன்னல் கம்பியில் கிருஷ்ணா நாயுடு, சரோஜா இருவரும் தூக்கில் தொங்கியப்படி சடலமாக இருந்துள்ளனர்.

அரசு பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை - பரபரப்பு சம்பவம்!

அரசு பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை - பரபரப்பு சம்பவம்!

தீவிர விசாரணை

அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், புகாரளித்துள்ளார். உடனே தகவலறிந்து விரைந்த எஃப்எஸ்எல் குழு தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை - அதிர்ச்சி பின்னணி! | Elderly Couple Committed Suicide In Bengaluru

அதில், மகன் அசோக், பெற்றோரிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு பெற்றோருடன் அசோக் சண்டை போட்டதைப் பார்த்ததாக தம்பதியின் மகள் கூறியுள்ளார்.