17 வயது சிறுமிக்கு 65 வயது முதியவரால் நேர்ந்த அவலம்; உதவிய செவிலியர் - கொடூரம்!!
17 வயது சிறுமியை 65 வயது முதியவர் கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி கர்ப்பம்
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் எரகாம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (65) என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை அவரின் தாயார் கவனித்துள்ளார். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, ராஜேந்திரன் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தான் கர்ப்பம் அடைந்துள்ளதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், இதுகுறித்து ராஜேந்திரனிடம் கேட்டுள்ளார்.
இருவர் கைது
அப்போது கருவை கலைக்காவிட்டால் இருவரையும் கொலை செய்து விடுவதாக ராஜேந்திரன் மிரட்டியுள்ளார். இதனையடுத்து தாராபுரம் அரசு மருத்துவமனை செவிலியர் உஷாராணி என்பவரின் மூலமாக சிறுமிக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால், டிசம்பர் 14ம் தேதி சிறுமிக்கு கருக்கலைப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் குழந்தைகள் நலக் குழும உறுப்பினர் தாரணிக்கு தெரியவர, அவர் அளித்த புகாரின் பேரில் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸார் ராஜேந்திரனையும், கருக்கலைப்புக்கு உதவிய உஷாராணியையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.