ஐன்ஸ்டீன் மூளையை திருடி 240 துண்டுகளாக வெட்டிய கொடூரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!
ஐன்ஸ்டீன் தலையைப் பிளந்து மூளை திருடி 240 துண்டா வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐன்ஸ்டீன்
பிரிட்டனில் 1879ம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்தார். 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகச் சிறந்து விளங்கினார். இவரது ஆராய்ச்சி நவீன உலகை வடிவமைத்தற்கு முக்கிய பங்கு வகித்தது. அதுமட்டுமில்லாமல் இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்றார்.
இந்த நிலையில் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் மருத்துவமனையில் 1955ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி உயிரிழந்தார்.அப்போது ஐன்ஸ்டீன் தலையைப் பிளந்து மூளையை நோயியல் நிபுணர் தாமஸ் ஹார்வி என்பவர் திருடிச் சென்றுள்ளார்.
நீண்ட நாட்கள் வாழ ஆசை.. பாக்டீரியாவை உடலில் செலுத்திக்கொண்ட விஞ்ஞானி - ஆராய்ச்சியில் நடந்த பயங்கரம்!
ஆய்வு
இதை யாருக்கும் தெரியாமல் 23 ஆண்டுகளாகப் பாதுகாத்து ஆய்வு நடத்தியுள்ளார்.அந்த ஆய்வில் மூளையை 240 துண்டுகளாக வெட்டியுள்ளார். இதனையடுத்து 1985ம் ஆண்டு ஐன்ஸ்டீன் மூளையை ஆய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டார்.
அதில் ஐன்ஸ்டீன் மூளையில் நியூரான்கள் மற்றும் க்ளியல் ஆகிய இரண்டு வகையான உயிரணுக்களின் அசாதாரண விகிதங்கள் அதிகமாக இருந்ததாகக் கூறப்பட்டு இருந்தது. ஐன்ஸ்டீனின் மூளையில் உள்ள செல்கள் மற்றும் மூளையின் வடிவம் குறித்த தகவல்கள் இடம்பெற்று இருந்தது. ஆனால் இந்த தகவலைப் பலரும் மறுப்பு தெரிவித்து வந்தனர் .