வரும் 10ம் தேதி பக்ரீத் பண்டிகை... - பொது விடுமுறை அளித்தது தமிழக அரசு
By Nandhini
அரசு பொது விடுமுறை
வரும் ஜூலை 10ம் தேதி தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து அன்று பொதுவிடுமுறையாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ‘ஜில் ஹாஜி பிறை’ இன்று தென்பட்டதால் ஜூலை 10ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவிக்கபட்டிருக்கிறது. இதனையடுத்து, வரும் ஜூலை 10ம் தேதி தமிழக அரசு சார்பாக பொது விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
என்னவென்னாலும் நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்.... மைதானத்தில் நடனமாடிய விராட் கோலி...