2000 ஆண்டுகள்; தங்க நாக்குகளுடன் மம்மிகள் கண்டுபிடிப்பு - ஆராய்ச்சியாளர்கள் வியப்பு!
மம்மிகளில் தங்க நாக்குகள் பொருத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தங்க நாக்கு
எகிப்தின் மத்திய நைல் டெல்டாவில், அலெக்ஸாண்டிரியாவின் டபோசிரிஸ் மாக்னா என்ற கோவில் உள்ளது. இங்கு மோசமான நிலையில் பாதுகாத்து வைக்கப்பட்ட 16 மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதில், 1000 ஆண்டுகள் வரை நிலத்தில் புதைந்து இருந்த இந்த மம்மிகளின் மண்டை ஓட்டில் தங்க நாக்குகள் பொருத்தபட்டிருந்தது கண்டறியப்பட்டது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மம்மி கண்டுபிடிப்பு
அதன்பின், தொல்பொருள் அமைச்சகம் இதனை ஆவணப்படுத்தியன் மூலம், இறப்புக்கு பிறகு உள்ள வாழ்க்கையில் பேசுவதற்கு உதவும் வழியாக இந்த தங்க நாக்குகள் பொறிக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த தங்க நாக்குகள் எகிப்தியர்களால் நடத்தப்படும் சடங்கு முறை. இவை இறந்தவர்கள் பாதாள உலகின் தலைவன் ஓசைரிஸூடன் தொடர்பு கொள்ள உதவி செய்வதாக நம்பி இருக்கலாம் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும், அந்த மம்மிகளின் கழுத்தை சுற்றி பாம்புகள், கீரீடங்கள் மற்றும் கொம்புகள் இருந்தன. மார்பில் பால்கன் தலையை குறிக்கும் நெக்லஸ் இருந்தன.
முன்னதாக கிளியோபாட்ரா VII பெயர் மற்றும் உருவப்படம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.