1000 ஆண்டு பழமையான 14 மம்மிகள் ஒரே இடத்தில் கண்டுபிடிப்பு

Discovery 1000 year primitive 14 mummies 14 மம்மிகள் கண்டுபிடிப்பு
By Nandhini Feb 14, 2022 09:30 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

தென்னாப்பிரிக்காவில் உள்ள பெரு நாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன் இறந்து பதப்படுத்தப்பட்ட உடல்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பெரு நாட்டில், தலைநகர் லிமாவிற்கு அருகில் காஜாமார்க்கில்லா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஒரு இடத்தில் மம்மி எனப்படும் பதப்படுத்தப்பட்ட 14 உடல்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த 14 மம்மிகளில் 6 குழந்தைகள், 2 பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரு நாட்டில் வாழ்பவர்கள், இறந்தவர்கள் வாழ்க்கை அதோடு முடிவது கிடையாது. அவர்கள் வேறு ஒரு உலகத்தில் பிறந்து வாழ்க்கையை தொடங்குவார்கள் என்று நம்பிக்கை வைத்து வருகிறார்கள்.

இதனால், இறந்தவர்களின் உடலை எரிக்காமல் அல்லது புதைக்காமல் பதப்படுத்தி பாதுகாத்து வைப்பார்கள். அவ்வாறு பதப்படுத்தப்பட்டு களிமண் பானை உள்ளிட்டவற்றுக்குள் வைத்து பூமிக்குள் புதைக்கப்பட்டிருந்த உடல்கள் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டு வருகிறது. 

1000 ஆண்டு பழமையான 14 மம்மிகள் ஒரே இடத்தில் கண்டுபிடிப்பு | 1000 Year Primitive 14 Mummies Discovery

1000 ஆண்டு பழமையான 14 மம்மிகள் ஒரே இடத்தில் கண்டுபிடிப்பு | 1000 Year Primitive 14 Mummies Discovery