நிறைவேறிய கனவு - 7 உலக அதிசயங்களை 7 நாட்களில் பார்வையிட்டு சாதனை!

Guinness World Records Egypt World
By Jiyath Jul 18, 2024 10:37 AM GMT
Report

7 உலக அதிசயங்களை 7 நாட்களுக்குள் பார்வையிட்டு நபர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

உலக அதிசயங்கள்

எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் 45 வயதான மேக்டி எய்ஸா. இவர் 7 உலக அதிசயங்களை ஒரு வாரத்துக்குள் பார்வையிட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை 6 நாட்கள் 11 மணி 52 நிமிடங்களில் அவர் படைத்துள்ளார்.

நிறைவேறிய கனவு - 7 உலக அதிசயங்களை 7 நாட்களில் பார்வையிட்டு சாதனை! | Egyptian Man Visits 7 World Wonders In 7 Days

இதன் மூலம் கடந்த ஆண்டு சாதனை புரிந்த இங்கிலாந்து வீரர் ஜேமி மெக்டொனால்டின் சாதனையை முறியடித்துள்ளார். உலகின் 7 அதிசயங்களை பார்வையிட பொதுப் போக்குவரத்தை மட்டுமே அவர் பயன்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து மேக்டி எய்ஸா கூறுகையில் "தங்கள் வாழ்வில் ஒரு கட்டத்தில் பெற வேண்டிய செழுமையான அனுபவம் இது. ஒரே சிறு தடங்கல் முழு பயணத்தையும் தடம் புரள செய்துவிடும்.

கரடிகளை அழிக்க சட்டம் நிறைவேற்றிய நாடாளுமன்றம்; வலுக்கும் எதிர்ப்பு - என்ன காரணம்?

கரடிகளை அழிக்க சட்டம் நிறைவேற்றிய நாடாளுமன்றம்; வலுக்கும் எதிர்ப்பு - என்ன காரணம்?

புதிய சாதனை 

இவை அனைத்தையும் தாண்டிதான் பயணிக்க வேண்டும். எனது பயணத்தை சீனப் பெருஞ்சுவரில் தொடங்கினேன். பின்னர் இந்தியாவின் தாஜ்மஹால், ஜோர்டானில் உள்ள பண்டைய நகரமான பெட்ரா,

நிறைவேறிய கனவு - 7 உலக அதிசயங்களை 7 நாட்களில் பார்வையிட்டு சாதனை! | Egyptian Man Visits 7 World Wonders In 7 Days

ரோமின் கொலோசியம், பிரேசிலில் உள்ள கிறிஸ்ட் தி ரிடீமர், பெருவில் உள்ள மச்சு பிச்சு மற்றும் இறுதியாக மெக்சிகோவின் பண்டைய மாயன் நகரமான சிச்சென் இட்சா ஆகியவற்றை பார்வையிட்டேன்.

விமானங்கள், ரயில்கள், பேருந்துகள், சுரங்கப் பாதைகள், போக்குவரத்து ஆகிய அனைத்திலும் பயணித்தேன். எனது கனவு நிறைவேற கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆனது" என்று தெரிவித்துள்ளார்.