கோழிக் கால் சாப்பிடுங்கள்; அடம்பிடிக்கும் அரசு - ஆத்திரத்தில் மக்கள்!
எகிப்திய அரசு மக்களை கோழிக் பாதங்களை சாப்பிடச் சொல்லி ஆலோசனை வழங்கியுள்ளது.
பொருளாதார நெருக்கடி
எகிப்தில் பொருளாதார நெருக்கடி மோசமாகி வருவதால் பலரும் தினசரி உணவுக்கே சிரமப்படுகின்றனர். ஒருசில மாதங்களிலேயே சில பொருளின் விலைகள் 2 மற்றும் 3 மடங்கு அதிகரித்து விட்டன. அடிப்படைப் பொருளான சமையல் எண்ணெய் கூட பலருக்கும் கிடைக்க எட்டாத ஒன்றாகிவிட்டது.
இந்நிலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதால், கோழிப் பாதங்களை உட்கொள்ளுமாறு கூறிய அரசாங்கத்தின் ஆலோசனை மக்களிடையே சினத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோழிக் கால்
கோழி பாதங்கள் புரதச்சத்து என்றாலும் அவை பொதுவாக நாய், பூனைகளுக்கும் அளிக்கப்படுவை. எகிப்து பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட உணவைச் சார்ந்திருப்பது தான் இந்த நிலைக்கு காரனம் எனக் கூறப்படுகிறது.
இதன் சுற்றுப்பயணத் துறையும் கிருமிப்பரவலால், ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவற்றால் சரிந்துவிட்டது. அதனால் அதன் பொருளியல் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் தெரிவிக்கப்படுகிறது.