கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் வலிக்கு சில மருத்துவ குறிப்புகள்

health baby husband wife
By Jon Feb 02, 2021 10:21 AM GMT
Report

கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களானது சற்று சிரமமாக இருக்கும். இந்த மூன்று மாதங்களில் வரும் பிரச்சனைகளை சமாளிக்க சத்தான உணவுகளை சாப்பிடாலே போதுமானது.

முதல் மூன்று மாதங்களில் புரத சத்து அடங்கிய உணவை நீங்கள் சாப்பிடுவதன் மூலம் உங்கள் குழந்தை வலுவுடன் கருவில் வளர தொடங்கும். பீன்ஸில் இந்த புரத சத்து தேவையான அளவு இருக்கிறது.

மேலும், இறைச்சி, கோழி, மீன், முட்டை, பால், பாலாடைக்கட்டி, தயிர், முதலியவற்றிலும் புரத சத்து காணப்படுகிறது. முதல் மூன்று மாதங்களில் உங்களுக்கு கால்சியம் சத்து என்பது தேவைப்படுகிறது. இதனால், பிறக்கும் உங்கள் குழந்தையின் எலும்பும் வலுவானதாய் இருக்கிறது. பாலினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் இந்த கால்சியம் சத்து மிகுதியாக இருக்கிறது.

செறிவூட்டப்பட்ட தானியம், ஜூஸ், சோயா, பிரெட் முதலியவற்றிலும் கால்சியம் சத்து இருக்கிறது. செறிவூட்டப்பட்ட உணவை வாங்கும்போது தரம் பார்த்து, டாக்டரிடம் பரிந்துரை செய்து வாங்க வேண்டியது அவசியமாகும்.

கர்ப்பிணி பெண்கள், ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் அதில் இருக்கும் வைட்டமின் சி குழந்தை பிறக்கும்போது உண்டாகும் சிக்கலை தவிர்க்க உதவுகிறது. மேலும், இதனால் தாய் மற்றும் குழந்தைக்கு தேவையான எதிர்ப்பு சக்தியையும் சேர்த்து தருகிறது.

கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும் அதனால் மூட்டு, முதுகு, கணுக்காலில் வலி ஏற்படும். அதை தடுக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். அப்போது தான் இடுப்பு எலும்பு மற்றும் உடல் தசைகள் வலுவடையும்.

இப்போது கர்ப்பகாலத்தில் சர்க்கரைநோய் வருவது சகஜமாகிவிட்டது. அவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் 20 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். உட்காரும் போது சேரில் அமராமல் தரையில் உட்கார வேண்டும்.