4300 ஆண்டுகள் பழமையான மம்மி.. தங்க இலையால் புதைக்கப்பட்ட ஆச்சர்யம்!
அரச குடும்பத்தை சேராத சாதாரண மனிதனின் மம்மியை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மம்மி
எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு தெற்கே உள்ள சக்காராவில் தற்போது அகழாய்வு ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் தான் உலகின் மிகப் பழமையான அரசர் அல்லாத சாதாரண மனிதனினான ஹெகாஷெப்ஸ் என்பவரின் மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தரையின் மேற்பரப்பில் இருந்து சுமார் 15 மீட்டர் ஆழத்தில் புதைந்திருந்த மூன்று கல்லறைகள் தோண்டப்பட்டன. அதில் ஒன்றில் தான் ஹெகாஷெப்ஷ்-ன் மம்மி இருந்துள்ளது. அந்த மம்மி தங்க இலையால் போர்த்தப்பட்டிருந்தது.
4300 ஆண்டு பழமை
அது சிதைவுறாமல் அப்படியே இருந்துள்ளது. இந்த மம்மி 4,300 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள காலகட்டத்தை சேர்ந்தது என்கிறார்கள். அந்தக் காலத்தைய மட்பாண்டங்களும், சிலைகளும் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தொல்லியல் நிபுணரும் எகிப்தின் முன்னாள் பழமை பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஜாஹி ஹவாஸ், தற்போது தோண்டி எடுக்கப்பட்டுள்ள இந்த மம்மிக்கள் கிறிஸ்து பிறப்பிற்கு முன்பு சுமார் 25 நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்கிறார்.
தமிழக முதலமைச்சரின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தி : தவறாக சித்தரிக்கப்பட்டமைக்கு கண்டனம் IBC Tamil
விளம்பரத்திற்காக நஞ்சாக்கப்படும் தமிழ் தேசியம்...! காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தோலுரிக்கும் கருணாநிதி IBC Tamil