3000 ஆண்டு பழமையான மம்மி உடலுக்கு உருவம் - தொழில்நுட்பம் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் சாதனை

world-success-mummy
By Nandhini Dec 31, 2021 07:36 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

எகிப்தில் பல்வேறு இடங்களில் பல ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சிகள் நடந்து வருகிறது. மற்ற நாடுகளை காட்டிலும் எகிப்தில் வாழ்ந்த மனிதர்களின் நாகரீகம் மிகவும் பழமையானது. ஏராளமான மர்மங்கள் எகிப்தில் இன்று வரை மறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அங்கு கண்டெடுக்கப்படும் உடல்கள் பல அடக்கு துணிகளை கொண்டு மூடப்பட்டு இருக்கும். இவற்றை 'மம்மி' என்று அழைக்கிறார்கள்.

மம்மிகளின் மீதுள்ள துணிகளை பிரித்து பார்க்காமலே தற்போது உள்ள நவீன தொழில்நுட்பத்தை கொண்டு அவற்றை ஸ்கேன் செய்வதன் மூலம் அதன் வடிவ அமைப்பிற்கு உருவம் கொடுத்திருக்கிறார்கள்.

முதல் முறையாக இது போன்று டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கொண்டு மம்மி உருவத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இது சாதாரண எகிப்து மக்களின் உடலை கொண்டு ஆய்வு செய்யவில்லை. எகிப்தின் முதலாம் பாரோ அமென்ஹோடெப் மன்னரின் உடல் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது.

அவரது உடல் மம்மி போன்று துணிகளால் மூடப்பட்டிருந்தது. அவற்றை நீக்காமலே டிஜிட்டல் முறையில் இந்த மன்னரின் உடலை ஸ்கேனிங் மூலம் பெற்றுள்ளனர். இதற்காக ஆராய்ச்சியாளர்கள் அதி நவீன கம்ப்யூட்டர் டோபோகிராபி (computer topography) என்கிற ஸ்கேன் முறையை பயன்படுத்தியுள்ளனர்.

இந்த மன்னரின் உடலானது பல்வேறு பொருட்களை கொண்டு அலங்கரித்து மூடப்பட்டதால் அவற்றை பிரிக்காமலே அவரது உடலுக்கு டிஜிட்டல் முறையில் உருவம் கொடுத்துள்ளனர். இது தான் வரலாற்றில் முதல் முறையாக மூடப்பட்டிருந்த மம்மியை பிரிக்காமலே அதன் உருவத்தை டிஜிட்டல் முறையில் பெற்றதாகும்.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் -

முதலாம் அமென்ஹோடெப் மன்னரின் மம்மி நவீன காலத்தில் அவிழ்க்கப்படவில்லை என்பது எங்களுக்கு ஒரு தனித்துவத்தை கொடுத்துள்ளது. அவர் முதலில் எப்படி மம்மியாக புதைக்கப்பட்டார் என்பதை ஆய்வு செய்வது மட்டுமல்லாமல், அவர் இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் அவர் எவ்வாறு நடத்தப்பட்டார் மற்றும் புனரமைக்கப்பட்டார் என்பதையும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டோம்.

மம்மியை டிஜிட்டல் முறையில் அவிழ்த்து, அதன் மெய்நிகர் அடுக்குகளை - முகமூடி, கட்டுகள் மற்றும் மம்மியின் துணிகளை அவித்தல்' மூலம் இவரை பற்றி நாம் பலவற்றையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

முதலாம் அமென்ஹோடெப் மன்னர் அவரின் தந்தையை போன்றே முக அமைப்பை கொண்டுள்ளார் என்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவரது உயரம் 169 செ.மீ, நல்ல உடலமைப்பு, மற்றும் சிறந்த பற்களை கொண்டுள்ளார். பல தங்க மணிகளை அணிந்துள்ளார் என்பதையும் இந்த டிஜிட்டல் ஸ்கேன் மூலம் கண்டுபிடித்துள்ளனர் என்றார்.